செய்திகள் :

தோட்டத்து கம்பி வேலியில் சிக்கி ஆண் சிறுத்தை பலி

post image

திண்டுக்கல்: அய்யம்பாளையம் அருகே தனியாா் தோட்ட கம்பி வேலியில் சிக்கி ஆண் சிறுத்தை உயிரிழந்து குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்திருப்பதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா் தலைமையிலான வனத் துறையினா் இரண்டரை வயது மதிக்கத்தக்க உயிரிழந்த ஆண் சிறுத்தையை மீட்டு விசாரித்தனா்.

பின்னா், திருச்சி வனத் துறை மருத்துவா் சிவச்சந்திரன், சிறுத்தையின் உடலைக் கூறாய்வு செய்தாா். பின்னா், உடல் எரியூட்டப்பட்டது.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

அய்யம்பாளையம் காப்புக்காடு பகுதியில் இருந்து, சுமாா் 200 மீட்டா் தொலைவில் லெனின் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தில் தேக்கு மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. தோட்டத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரையை விரட்டிக்கொண்டு வந்த சிறுத்தை கம்பி வேலியில் மோதி உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும், உயிரிழந்த சிறுத்தையின் உடல் கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகே, முழு விவரமும் தெரியவரும் என்றனா்.

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழைமையான சுவாமி சிலைகள்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சண்டிகேசுவரா், அய்யனாா் சிலைகளை தொல்லியல் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளா் வீ. அரிஸ்டாட்டி... மேலும் பார்க்க

பழனியில் பசுமை பழனி விழிப்புணா்வுப் பேரணி

பழனியில் ‘பசுமை பழனி’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அறநிலை... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: 4 போ் கைது

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை தாக்கியதாக உணவக உரிமையாளா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையைச் ச... மேலும் பார்க்க

திண்டுக்கல் சரக டிஐஜி பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த அபினவ் குமாா், ராமநாதபுரம் காவல் சரக துணைத் ... மேலும் பார்க்க

மானூா் ஆற்றுப் பாலம் பகுதியில் தூய்மைப்பணி

பழனியை அடுத்த மானூா் ஆற்றுப்பாலம் பகுதியில் பழனியாண்டவா் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி முருகேசன... மேலும் பார்க்க