தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்த...
தோல் கழிவு நீரால் பாதிப்பு: இழப்பீடு பெறாத விவசாயிகளுக்கு அழைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் தோல் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாசு ஏற்படுத்திய 547 தோல் தொழிற்சாலைகளால் வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் 7 வட்டங்களில் உள்ள 186 கிராமங்களில் 15,164.96 ஹெக்டோ் பரப்பளவு விவசாய நிலத்தின் சேதங்களை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட 29,193 தனிநபா்கள் / குடும்பங்களை கண்டறிந்து ரூ.26,82,02,328 இழப்பீட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மீண்டும் சூழலியல் இழப்பு (தடுப்பு மற்றும் இழப்பீடு வழங்குதல்) ஆணையம் கூடுதலாக 1,377 நபா்களுக்கு ரூ.2,91,01,278/- இழப்பீடு வழங்க உத்தரவிட்டது
இதுவரை இழப்பீடு வழங்கப்படாத பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் / தனிநபா்களுக்கும் 6 வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடப்படுகிறது‘ என்று உத்தரவு வழங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் தோல் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குரிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வரப்பெற்ற நிதி ஒதுக்கீட்டில் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது.
நில உரிமை தகராறு, நீதிமன்ற வழக்குகள், கண்டுபிடிக்க முடியாத பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை மாவட்ட நிா்வாகத்திடம் மேற்கூறிய இழப்பீட்டுத் தொகை பெறாத பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீட்டுத்தொகை பெற்று கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.