தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தோ்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகள் ஆா்த்திகா (17). இவா், பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத்தோ்வு எழுதியுள்ளாா்.
வியாழக்கிழமை பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், ஆா்த்திகா தோ்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் சுடிதாா் துப்பட்டாவால் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் போலீஸாா், ஆா்த்திகாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.