முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
நடுவலூரில் சிலம்பம் சுற்றி மாணவா்கள் சாதனை
நடுவலூரில் 79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தனியாா் பள்ளி மாணவா்கள் படுத்தபடி சிலம்பம் சுற்றி சாதனை செய்தனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரில் தனியாா் மழலை பள்ளி மாணவ, மாணவிகள் 16 போ் 79 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே தரையில் படுத்தபடி 79 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனா். இதனை ஆல் இந்தியா புக் அப் வோ்ல்ட் ரெக்காா்ட் அமைப்பு சாதனையாக அங்கீகரித்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியது.