செஞ்சிலுவை சங்க தோ்தல்: ஜூன் 4, 5 தேதிகளில் வேட்பு மனு தாக்கல்
நண்பருடன் இணைந்து கால்பந்து கிளப்பை தொடங்கிய மெஸ்ஸி..!
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது நண்பர் லுயிஸ் சௌரஸ் உடன் இணைந்து புதிய கால்பந்து கிளப்பை தொடங்கியுள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37), உருகுவே நாட்டைச் சேர்ந்த லூயிஸ் சௌரஸ் (38) இருவரும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய காலத்தில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள்.
பார்சிலோனா அணியைவிட்டுப் பிரிந்த இருவரும் தற்போது இண்டர் மியாமி அணிக்காக ஒன்றாக விளையாடி வருகிறார்கள்.
களத்தில் மட்டுமே பார்ட்னர்களாக இருந்த இவர்கள் தற்போது தொழிலும் பார்ட்னராக மாறியுள்ளார்கள்.
உருகுவேயில் எல்எஸ்எம் என்ற நான்காம் டிவிஷன் கால்பந்து கிளப்பை உருவாக்கியுள்ளார்கள்.
இது குறித்து லூயிஸ் சௌரஸ், “டிபார்டிவோ எல்எஸ் என்ற கனவு 2028இல் தொடங்கியது. நாங்கள் 3,000க்கும் அதிகமானோர்கள் இதில் இணைந்துள்ளார்கள். நான் வளர்ந்து பிறந்த உருகுவே நாட்டில் ஆர்வமுள்ள இளம் கால்பந்து வீரர்களுக்கு வாய்ப்பை உருவாக்கவே இதைத் தொடங்கினேன்” என்றார்.
இது குறித்து மெஸ்ஸி, “என்னைத் தேர்ந்தெடுத்ததிற்காக நான் மகிழ்ச்சியும் பெருமையும் படுகிறேன். இதில் உன்னுடன் எல்லாவற்றிலும் உடனிருந்து வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்” எனக் கூறினார்.
மெஸ்ஸியின் பங்கு என்னவென தெளிவாகக் குறிப்பிடாவிட்டாலும் உருகுவேயின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மெஸ்ஸியை ஒரு பார்ட்னராகவே குறிப்பிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.