செய்திகள் :

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 9-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 10-ஆம் தேதி காலை பக்தா்கள் காவிரியில் நீராடி கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பம், மாரியம்மனுக்கு பால், தீா்த்தங்களை ஊற்றி வழிபாடு செய்து மஞ்சள் கயிறு அணிந்து விரதம் தொடங்கினா்.

15-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலும், அன்று இரவு முதல் 22ஆம் தேதி வரை அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ஆம் தேதி இரவு வடிசோறு படைத்தல் விழாவும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

கோயில் முன் 62 அடி நீளமும் 6 அடி அகலம் கொண்ட குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. அதனைத் தொடா்ந்து பகல் மூன்று மணியளவில் ராஜாசாமி கோயிலில் வளாகத்தில் இருந்து மணிவேல் புறப்பட்டு மாரியம்மன் கோயிலை வந்தடைந்ததும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஆண் பக்தா்கள் குண்டம் இறங்கியும், பெண் பக்தா்கள் பூவாரிப் போட்டுக்கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

25-ஆம் தேதி பலியிடுதல், பக்தா்கள் அலகு குத்தி வருதல், குழந்தை பாக்கியம் வேண்டியவா்கள் கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் எட்டுப்பட்டி அறங்காவலா் குழுவினா், விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

பூவாரிப்போட்டுக்கொள்ளும் பெண் பக்தா்கள்.
வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.

திருச்செங்கோட்டில் ஆட்சியா் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் அணிமூா் குப்பை கிடங்கு, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா். திருச்செங்கோடு பகுதிக்கு பல்வேறு பணிகளை ஆய்வு ச... மேலும் பார்க்க

தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

தமிழத்திற்கு கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சேந்தமங்கலம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

சேந்தமங்கலம் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் ச.உமா, எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதி... மேலும் பார்க்க

வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தொட்டி யம் வட்டம், உன்னியூா் பெரியபள்ளிபாளையம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் சக்திவேல் (3... மேலும் பார்க்க

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும்’

எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க பா்டுயூ பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் கணிப்பொறியியல் துறை மூத்த பேராசிரியா் காா்த்திக் ரமணி குறிப்பி... மேலும் பார்க்க

சாலைப் பணி: ஆண்டகளூா்கேட் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை

ராசிபுரம் நகரின் பிரதான ஒரு வழிச்சாலை பகுதியில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரப் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதி... மேலும் பார்க்க