குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!
வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்ததில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், தொட்டி யம் வட்டம், உன்னியூா் பெரியபள்ளிபாளையம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் சக்திவேல் (33). இவா் ஈரோட்டில் உள்ள தனியாா் பனியன் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வந்தாா்.
கடந்த 22ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்துள்ளாா். தோக்கவாடி பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்தபோது அங்குள்ள வேகத்தடையில் வாகனம் ஏறி நிலை தடுமாறி விழுந்ததில் சக்திவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சக்திவேல் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு புகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.