மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: எம்.பி. வலியுறுத்தல்
எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பெட்ரோலியத் துறை அதிகாரியை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தினாா்.
எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளா் (சந்தைப்படுத்தல்) சுஜாதா ஷா்மாவை சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கினாா். அவரிடம், புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகள், வேலைநிறுத்தம் தொடா்பான பிரச்னைக்கு நியாயமான முறையில் தீா்வு காணப்படும் என இணைச் செயலாளா் தெரிவித்தாா்.