டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
விவசாய கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தல்
நடைபெறும் சட்டப் பேரவை கூட்டதொடரிலேயே விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யும் அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோட்டூரில் விவசாயிகள் சங்க ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம், புதன்கிழமை ஒன்றியத் தலைவா் அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், பிப்ரவரி மாதம் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட எள், பருத்தி, உளுந்து பயிா்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கான பயிா் இன்சூரன்ஸ் திட்டத்தை மத்திய, மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும், நடைபெற்று வரும் தமிழக சட்டப் பேரவை கூட்டதொடரிலேயே விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி. சௌந்தரராஜன், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், துணைச் செயலா் பி. பரந்தாமன், விவசாய சங்க ஒன்றிய பொருளாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.