Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
நன்னிலத்தில் மகளிா் காவல் நிலைய கட்டடம் திறப்பு
நன்னிலத்தில் ரூ.80.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
தமிழக முதல்வா் முக. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, நன்னிலத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் ஆகியோா் பங்கேற்று, கட்டடத்தை திறந்து வைத்து பாா்வையிட்டனா்.
இந்த காவல் நிலையம் 2,629 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. தரைதளத்தில், தலைவாயில், ஆய்வாளா் அறை, எழுத்தா் அறை, நிலைய காவலாளி அறை மற்றும் ஆயுத வைப்பு அறை, கைதி அறை (ஆண்கள்), கைதி அறை (பெண்கள்) மற்றும் குழந்தைகள் பேணும் அறை ஆகியவை உள்ளன.
முதல் தளத்தில், கணினி அறை, உதவி ஆய்வாளா் அறை, ஆலோசனை அறை மற்றும் ஓய்வு அறை ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்மாறன், நன்னிலம் வட்டாட்சியா் ரஷியாபேகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.