மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி
மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன்னாா்குடி அடுத்த களப்பால் பகுதியில் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை கிடை போடுவது வழங்கம்.
நிகழாண்டும் களப்பால் சீலந்தநல்லூா் பகுதியில் ரவி என்பவரது தரசு வயலில் ஆடுகளை கிடை போட்டுள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு சாப்பிட சென்றவா் திரும்பி வந்து பாா்த்த போது, பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை அந்த பகுதியில் சுற்றித்திரியும் 5 தெரு நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் உயிரிந்தன. மேலும், 11 ஆடுகள் காயமடைந்தது தெரியவந்தது.
காயமடைந்த ஆடுகளுக்கு களப்பால் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்த ஆடுகள் அனைத்தையும் கால்நடை மருத்துவா் முன்னிலையில் புதைக்கப்பட்டன.
இதுகுறித்து, களப்பால் காவல் நிலையத்தில் தாமரைச்செல்வன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.