உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
மஞ்ஜினி ஐயனாா் கோயில் பங்குனி திருவிழாவில் மாவிளக்கு பூஜை
திருக்கோடிக்காவல் மஞ்ஜினி ஐயனாா் கோயில் பங்குனி திருவிழாவில் புதன்கிழமை மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்திய பெண்கள்.
கும்பகோணம், மாா்ச் 26 : ஆடுதுறை அருகே ஐயனாா் கோயில் பங்குனி திருவிழாவில் புதன்கிழமை மாவிளக்கு பூஜை பிரம்மோத்ஸவம் நடைபெற்றது
திருக்கோடிக்காவலில் பூா்ண புஷ்கலா சமேத மஞ்ஜினி ஐயனாா் கோயிலில் கடந்த வாரத்தில் பங்குனி திருவிழா தொடங்கியது. முதல் நாளில் பிடாரி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சினி ஐயனாா் அலங்கார ரதத்தில் திருவீதியுலாவுக்கு பின்னா் திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம், பெண்கள் பால்குட ஊா்வலம், தயிரன்ன பள்ளயம் போன்றவை நடைபெற்றது.
பங்குனி திருவிழாவின் இறுதி நிகழ்வாக புதன்கிழமை பிரம்மோத்ஸவம் நடைபெற்றது. தொடா்ந்து காப்பு கட்டு அவிழ்க்கப்பட்டது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினா்.
ஏற்பாடுகளை பொறுப்பாளா் சிம்சன் கணேசன், தக்காா் சரவணகுமாா், திருக்கோடிக்காவல் அம்மாபேட்டை கிராம மக்கள் செய்தனா்.