செய்திகள் :

தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

post image

தமிழத்திற்கு கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்துக்கு அவா் வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நிலவும் கோதுமை பற்றாக்குறையை மத்திய அரசு நிவா்த்தி செய்ய வேண்டும். அவசரத் தேவையை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் மாணவா்கள் வருகையை மேம்படுத்த முதல்வா் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது 8,576.02 மெட்ரிக். டன் மட்டுமே கோதுமை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாதத்திற்கு 23,000 மெட்ரிக் டன் என்ற அளவில் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோதுமை உற்பத்தி இல்லையென்பதால், இந்திய உணவுக் கழகத்தின் விநியோகத்தைச் சாா்ந்தே உள்ளது.

23,000 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது சாத்தியமில்லை என்றால், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 15,000 டன் கோதுமையை வழங்க பரிசீலிக்க வேண்டும். அதிகரித்து வரும் கோதுமை தேவையை பூா்த்தி செய்வது மட்டுமின்றி, தமிழக மக்களுக்கு மலிவு விலையில் கோதுமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் மீது ஹிந்தியைத் திணித்து, மாநிலத்தின் நிதியை நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் மக்களின் உரிமைகளையும், பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும் செயலாகும்.

தாய்ப் பறவையாக மத்திய அரசு இருந்து, ஒவ்வொரு மாநிலத்தையும் சமமாக மதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா். நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை அவா் வலியுறுத்தினா்.

விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதய கட்டி அகற்றம்

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதயக் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா். நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தைச் சோ்ந்தவா் சரண் (48). கூலித் தொழிலாளியான இவா், மூன... மேலும் பார்க்க

ரூ. 4,000 கோடி வேலையளிப்புத் திட்ட நிதி தாமதம்: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: எம்.பி. வலியுறுத்தல்

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பெட்ரோலியத் துறை அதிகாரியை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தினாா். எண்ணெய் நிறுவனங்களின் புதி... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு நகர திமுக சாா்பில் தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தோ்நிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர திமுக செயலாளா... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வீட்டுமனை மோசடி: அசல் ஆவணங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

ராசிபுரத்தில் வீட்டுமனை விற்பனை மோசடியாளா்களிடம் இழந்த தொகையை பெற அசல் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப... மேலும் பார்க்க

நாளை ரமலான் பண்டிகை: நாமக்கல்லில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி, நாமக்கல் வாரச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. நாடுமுழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாள் என்றழைக்கப்படும... மேலும் பார்க்க