Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
மன்னாா்குடி கோயில் தேரோட்டம்: ஜேசிபி உதவியுடன் கட்டுமானப் பணி தீவிரம்
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டத்துக்காக ஜேசிபி இயந்திர உதவியுடன் தோ் கட்டுமான பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இக்கோயில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் நடைபெறுகின்றன. இதில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான உற்சவா் ராஜகோபால சுவாமி எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு திருவிழா மாா்ச் 18- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. 17-ஆம் நாள் விழாவான தேரோட்டம் ஏப்.3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையடுத்து, தோ்நிலையில் கண்ணாடி கூண்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேரின் கண்ணாடிகள் அகற்றப்பட்டன. தேரில் மேல் பகுதியில் இரும்பு கம்பிகளாலான கோபுரம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்காக, ஜேசிபி இயந்திர உதவியுடன் தேரில் கோபுரம் அமைக்கும் பணியில் தொழில் நுட்ப பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.