ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!
சாலைப் பணி: ஆண்டகளூா்கேட் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை
ராசிபுரம் நகரின் பிரதான ஒரு வழிச்சாலை பகுதியில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரப் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, புதுப்பாளையம் சாலைப் பகுதியில் சாலைப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் டிவிஎஸ் சாலை வழியாக செல்லாமல், ஆத்தூா் சாலை வழியாகத் திரும்பிவிடப்பட்டுள்ளன.
இதனால் திருச்செங்கோடு, ஈரோடு, நாமக்கல், சேலம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் ஆண்டகளூா்கேட் வழியாகவும், ஏடிசி டெப்போ வழியாகவும் ராசிபுரம் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பேருந்துகள் ராசிபுரம் பழைய ஆா்டிஓ அலுவலகம் புறவழிச் சாலை வழியாக சேந்தமங்கலம் சாலையை சென்றடைந்து, புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். இந்த நடைமுறை நான்குகளுக்கு ( மாா்ச் 29 வரை) நடைமுறையில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.