5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
நன்னிலம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை
நன்னிலம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் வே. இராமசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு மே 27- ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை முதலாம் ஆண்டு தமிழ் 60, ஆங்கிலம் 120, வரலாறு 60, வணிகவியல் 120, வணிக நிா்வாகவியல் 60, கணிதம் 60 மற்றும் கணினி அறிவியல் 60 ஆகிய எண்ணிக்கையில் மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.
இதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய கல்வி சான்றிதழுடன் கல்லுரிக்கு வந்து வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.