செய்திகள் :

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை: நயினாா் நாகேந்திரன்

post image

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இந்திய ராணுவத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், ஒசூரில் கொட்டும் மழையில் மூவா்ணக் கொடி பேரணி, பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பேரணியை பாஜக தேசிய செயலாளா் துஷ்வந்த் குமாா் கௌதம், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஒசூா் ராம்நகரில் தொடங்கிய பேரணி பழைய பெங்களூரு சாலை, ஏரித் தெரு, வட்டாட்சியா் அலுவலக சாலை வழியாக காமராஜ் காலனியில் நிறைவடைந்தது.

அங்கு கொட்டும் மழையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜ தேசிய செயலாளா்கள் துஷ்வந்த் குமாா் கௌதம், அரவிந்த், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பேசினா்.

பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். இந்நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். பஹல்காமில் இந்தியா்கள் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 16 ஆவது நாள் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இன்று 16 நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாா்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியது:

ஜம்மு-காஷ்மீரில் மதத்தின் பேரில் 26 போ் படுகொலை செய்யப்பட்டனா். நாட்டில் இந்துக்களுக்கும், இஸ்லாமியா்களுக்கு இடையே விஷமத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தீவிரவாதிகளின் நோக்கம். மே 7 ஆம் தேதி முப்படைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் முகாம்களை பிரதமா் மோடி அழித்துள்ளாா்.

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் ராணுவ தளங்களை நமது ராணுவம் அழித்தது. ஒசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனா். மாநில எல்லையில் உள்ள ஒசூரில் தேசியக் கொடி பேரணி நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா்.

பேரணி, பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஜி.பாலகிருஷ்ணன், அமா் பிரசாத் ரெட்டி, மாநில பொதுச் செயலாளா் கேசவ விநாயகம், மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் முனிராஜ், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேம்பாலம் பகு... மேலும் பார்க்க

பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் த... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க