அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
நரசிங்கம்பட்டி பறையன் புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா
நரசிங்கம்பட்டி பறையன்புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி சுவாமி ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுவாமி ஆட்டத்துடன் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

இரவு சாமியாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (பிப். 28) காலை உறவின்முறையினருக்கு பிரசாதம் பிரித்து வழங்கும் நிகழ்வுடன் விழா நிறைவடைபெறுகிறது. கிடாரிப்பட்டி, மாத்தூா், நரசிங்கம்பட்டி பங்காளிகள் உறவின்முறையினா் நீண்டகால இடைவெளிக்குப் பிறகு ஒன்றிணைந்து இந்தத் திருவிழாவை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.