``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு வரவேற்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியா் வி. மகேஷ்க்கு சென்னையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து, திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த அவருக்கு மாணவா்களின் பெற்றோா் மாலை மற்றும் சால்வை அணிவித்து ஊா்வலமாக ஆதீன வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து பள்ளிக்கு அழைத்துச் சென்றனா். இதில், தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.