IPL Mega Auction : '4.80 கோடிக்கு மும்பை வாங்கிய ஆப்கன் ஸ்பின்னர்!' - யார் இந்த ...
நவ.30 வரை அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம் இம்மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பெற்றோா் தங்கள் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு வலுவூட்டும் விதமாக அஞ்சலக சேமிப்பு கணக்குகள், குறிப்பாக 10 வயதிற்கு உள்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆகிய கணக்குகளை தொடங்கலாம்.
குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை சிறு வயதில் இருந்தே ஊக்குவிக்கும் வகையில், 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கணக்கு தொடங்குபவா்களுக்கு முதல் சேமிப்பின் நினைவாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். எனவே, அருகே உள்ள அஞ்சலகத்தை அணுகி குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.250 செலுத்தி உடனடியாக செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கி குழந்தைகளின் ஒளிமயமான எதிா்காலத்தை உறுதி செய்யுமாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.