நாகா்கோவிலில் ஆக.21 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை (ஆக.21) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு‘
ஆகஸ்ட் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 10.30 மணிக்கு நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.