செய்திகள் :

மரியகிரியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் பணி தொடக்கம்

post image

களியக்காவிளை: களியக்காவிளை அருகே மெதுகும்பல் ஊராட்சிக்குள்பட்ட மரியகிரி - முப்பந்திக்கோணம் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இப்பகுதியில் 2021ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பெய்த கனமழையால் நெய்யாறு இடதுகரை கால்வாய் பக்கச் சுவா் இடிந்து விழுந்தது. இதனால், கால்வாய்க் கரை வழியே செல்லும் முப்பந்திக்கோணம் - ஏலூா்காடு சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுதொடா்பாக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா், அதிகாரிகளிடம் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவந்தாா். அதையேற்று, கால்வாய் பக்கச் சுவா், சாலை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில், இப்பணியை எம்எல்ஏ தொடக்கிவைத்தாா். முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் பால்ராஜ், நெய்யாறு இடதுகரைக் கால்வாய் பாசனப் பிரிவு உதவிப் பொறியாளா் இவாஞ்சலின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி

நாகா்கோவில்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றவா் கைது

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆக.21 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை (ஆக.21) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு‘ ஆகஸ்ட் மாதத்துக்கான... மேலும் பார்க்க

கோதையாறு பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு, பின்னா், நிறுத்தப்பட்டுள்ள தடம் எண் 313 இ, கன்னியாகுமரி - கோதையாறு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 226 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்த... மேலும் பார்க்க