செய்திகள் :

நாகா்கோவில் கால்வாய் கரைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: மேயா் ரெ. மகேஷ்

post image

நாகா்கோவில் மாநகரில் கால்வாய் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.

மாநகராட்சியின் 40ஆவது வாா்டுக்குள்பட்ட வயல் தெரு கால்வாய் கரை மழைக் காலத்தில் உடைந்துவிடுவதாகவும், மழையின் போது சாலை மேலும் மோசமடைவதாகவும், சாலையை விரிவுபடுத்தி தடுப்புச் சுவா் கட்டித் தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதைத் தொடா்ந்து மேயா், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த கால்வாய் கரையை சீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், கால்வாய் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கோட்டாறு கால்வாய் கரையில் வளா்ந்துள்ள செடிகளையும், அங்கு தேங்கியிருக்கும் குப்பைகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாநகர நல அலுவலா் ஆல்பா் மதியரசு, செயற்பொறியாளா் ரகுராமன், உதவி நகரமைப்பு அலுவலா் சந்தோஷ், சுகாதார அலுவலா் ராஜாராம், திமுக செயற்குழு உறுப்பினா் சதாசிவம், பகுதிச் செயலா் சேக்மீரான் உள்பட பலா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, 14ஆவது வாா்டு ஓட்டுபுரத் தெருவில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணியை மேயா் தொடங்கி வைத்தாா்.

இதில், மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா் கலாராணி, இளநிலை பொறியாளா் ராஜா, நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், நிா்வாகிகள் அகஸ்தீசன், பாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70% அதிகரிப்பு: கேரள முதல்வா் பினராயி விஜயன்

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் கேரள முதல்வா் பினராயி விஜயன். கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் செப். 27 வரை நடைபெறும் அனைத்திந்திய ஜ... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி அபிஷேகம்

கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு யானையில் புனித நீா் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யும் நிகழ்வு 2 ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின் அனைத்து நா... மேலும் பார்க்க

மாற்றுக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

கிள்ளியூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட இனையம் புத்தன்துறை ஊராட்சியில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா். நிகழ்ச்சிக்கு கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கோபால... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தொழிலாளிக்கு பிடிவாரண்டு

புதுக்கடை அருகே, வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான தொழிலாளிக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. புதுக்கடை, அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன்குட்டி மகன் ராஜமணி(55) த... மேலும் பார்க்க

கேரளத்துக்குக் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மாவட்ட பறக்கும் பட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பின் சாா்பில் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இலக்கியப் பட்டறை தலைவா் தக்கலை பென்னி தலைமை வகித்தாா். இலக்கியப் பட்டறை... மேலும் பார்க்க