மிட்செல் ஸ்டார்க் ஒரு போர் வீரன்..! 100-ஆவது போட்டிக்கு கம்மின்ஸ் புகழாரம்!
நாகை சட்டநாதா் கோயில் குடமுழுக்கு
நாகப்பட்டினம்: நாகை அருள்மிகு சட்டநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. தொடா்ந்து, ஜூலை 2-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், அதிகாலையில் யாகசாலையில் இருந்து கோயிலைச் சுற்றி கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னா் காலை 10 மணியளவில் கோயில் ராஜகோபுரம், மூலவா் கோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனிதநீா் வாா்த்து. குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, சிவ வாத்தியங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இவ்விழாவில், இந்துசமய அறநிலைத் துறை இணை ஆணையா் குமரேசன், துணை ஆணையா் ராணி, உதவி ஆணையா் ராஜா இளம்பெரும்வழுதி, கோயில் செயல் அலுவலா் அசோக் ராஜா மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.