நாகையில் கடற்கரை கைப்பந்து போட்டி
நாகையில் நடைபெற்ற மண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் 8 மாவட்டங்களை சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்று விளையாடினா்.
நாகையில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது. தடகளம், கூடைப்பந்து, கபடி, நீச்சல், கையுந்து பந்து, இறகுப் பந்து, கேரம், கோ-கோ, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கால்பந்து, சிலம்பம், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
நாகை புதிய கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு திருச்சி மண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் செப்.8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலா் குமரன் போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களை மாணவா்கள் பங்கேற்றனா். ஆண், பெண் என இருபாலா்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.