Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
நாகையில் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்
நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை (ஆக.1) தொடங்கிவைக்கிறாா்.
நாகை மாவட்டத்தில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா, ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்கல்வி நிலைய வளாகத்தில் ஆக.1-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைக்கிறாா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி வரவேற்கிறாா். புத்தகத் திருவிழாவில், நாள்தோறும் மாலை கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், உரைவீச்சு, நூல் வெளியீடு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
விழாவில், எழுத்தாளா்கள், கவிஞா்கள், பேச்சாளா்கள், திரைப்பட இயக்குநா், திரைப்பட பாடலாசிரியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திரைப்பட இசையமைப்பாளா்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மேலும், நாள்தோறும் மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, பழைமையான காா்கள் கண்காட்சி, பெண்கள் சிறுமிகளுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, ஆண்கள் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள், மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.