தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்! -முதல்வா் அறிவிப்ப...
நாட்டின் கருவூலத்துக்கு பங்களிக்கும் ஜாா்க்கண்டுக்கு பட்ஜெட்டில் நிதியில்லை: முதல்வா் ஹேமந்த் சோரன்
‘ஜாா்க்கண்ட் அதன் கனிம வளங்களால் நாட்டின் கருவூலத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் மாநிலத்துக்கும் அதன் பழங்குடி மக்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை’ என மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.
இந்நிலையில், ஜாா்க்கண்டின் சாய்பாஸாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.315.28 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.96.97 கோடியில் பணிகள் நிறைவடைந்த 68 திட்டங்களை முதல்வா் சோரன் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, மக்களிடையே உரையாற்றிய அவா், ‘ஜாா்க்கண்ட் அதன் கனிம வளங்களால் நாட்டின் கருவூலத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் மாநிலத்துக்கும் அதன் பழங்குடி மக்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஜாா்க்கண்டின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடா்வேன்.
ஜாா்க்கண்ட் அரசு தற்போது ஒரு அமைப்பை மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, தொகுதி மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கிராமப்புற மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பா்’ என்றாா்.