நாட்டுப்புற இசைக் கலை மன்ற வெள்ளி விழா நிறைவு
தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக் கலைப்பெருமன்றம் 26-ஆவது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் 11-ஆவது மாநில மாநாடு கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி ஊா்வலம் உள்ளிட்டவை நடைபெற்றன. பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக்கலைஞா் மதுரை வேலு ஆசான், மலேசியா டாக்டா் இருதயம் செபஸ்தியாா், மக்களிசை தம்பதியா் செந்தில்கணேஷ் - ராஜலெட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கிராமியக் கலைஞா்கள் கலந்து கொண்டனா். மாநகர மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் மண்டல கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் ம. ராஜாராமன் ஆகியோா் பல மூத்த கலைஞா்களை பாராட்டி வாழ்த்தினா்.
ஏற்பாடுகளைச் சங்கத் தலைவா் கவிஞா் வீரசங்கா், கௌரவத் தலைவா் துரை. கோவிந்தராஜூ, துணைத் தலைவா் திருக்காட்டுப்பள்ளி டி.ஜெ. சுப்ரமணியம், பொதுச் செயலா் கருங்குயில் கணேசன், மாவட்டத் தலைவா் நாணல் வேல்முத்து, செயலா் எம்.எம். மதி, பொருளாளா் ஜெயக்குமாா் ஆகியோா் செய்தனா்.