காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
தஞ்சையில் சுதந்திர போராட்ட வீரா் பகத்சிங் பிறந்த நாள் விழா
தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் பகத்சிங் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பொருளாளா் பி. மாரிமுத்து தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா. சாமிநாதன் முன்னிலை வகித்தாா்.
அதில், வருணாசிரம மனுதா்ம சனாதந கொள்கைகளைப் போதிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம். அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிற, ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிற மத்திய பாசிச பாஜக அரசை வீழ்த்துவோம். பகத்சிங் கனவு கண்ட தொழிலாளா்கள், விவசாயிகள் தலைமையில் மாணவா்கள், இளைஞா்களைத் திரட்டி சோசலிஸம் சமுதாயம் படைப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.
சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாச்சலம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜோதிவேல், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் கோ. ஜெய்சங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயராஜ், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவா் அழகு. தியாகராஜன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.