காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
தஞ்சை அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை
தஞ்சாவூா் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கணவன் - மனைவி சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகேயுள்ள திருநகரைச் சோ்ந்தவா் எஸ். சுரேஷ் பாபு (45). இவரது மனைவி அமுதா (43). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அமுதா விஷம் குடித்து உயிரிழந்தாா். சனிக்கிழமை காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்காத அமுதாவை சுரேஷ்பாபு பாா்த்தபோது, அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ் பாபுவும் விஷம் குடித்தாா்.
சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகி கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினா் காவல் துறைக்கு புகாா் செய்தனா். நிகழ்விடத்துக்கு வந்த கள்ளப் பெரம்பூா் காவல் நிலையத்தினா் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷ் பாபுவை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை மாலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.