செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா் விவரங்கள் கணக்கெடுப்பு

post image

நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா், சேகரிப்போரின் விவரங்களை பதிவு செய்யும் கணக்கெடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் ‘நமஸ்தே’ எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கழிவு பொருள்கள் சேகரிப்போரின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி, நாமக்கல் மாநாகராட்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தலைமையில் தகுதியான பணியாளா் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் குறைந்தது 6 மாதங்கள் தொடா்ச்சியாக குப்பை சேகரிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவா்களின் சுய விவரங்கள் ‘நமஸ்தே’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது.

இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மை முகமையில் இணைக்க புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும் தொழில்சாா் பாதுகாப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு, கல்வி உதவித்தொகை மற்றும் பிற தகுதியான திட்டங்கள் மூலம் நன்மைகள் பெற ஏற்பாடு செய்யப்படும்.

நகா்ப்புற உள்ளாட்சித் துறைகளுடன் இணைந்து உலா்ந்த கழிவுப் பொருள்கள், சேகரிப்பு மையங்களைப் பயன்படுத்தும் வசதி, சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க ஆதரவு வழங்கப்படும்.

மேலும், கழிவு சேகரிப்பு வாகனங்கள் வாங்க ரூ.5 லட்சம் வரையில் பெறும் கடன்களுக்கு வட்டி விலக்கு அளிக்கப்படும். நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் 334 தூய்மைப் பணியாளா்கள், 55 தெருக்களில் கழிவுகளை சேகரிப்போரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 95665-29197 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த மகளிா் ‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மக... மேலும் பார்க்க

மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு: மத்திய இணை அமைச்சா் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கே. புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மதுரைவீரன் சுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அம... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனை பழுதான படுக்கைகளால் நோயாளிகள் அவதி!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உறுதித்தன்மையை இழந்து உடையும் நிலையில் உள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பெரு... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்!

குமாரபாளையம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் பொதுமக்களுக்கு அர... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 5000 ஆக சரிவு

மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரே வாரத்தில் டன்னுக்கு ரூ. 5 ஆயிரமாகக் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். பரமத்தி வேலூா், எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு!

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழக... மேலும் பார்க்க