செய்திகள் :

நாயகனான பூவையார்..! முதல்பார்வை போஸ்டர் ரிலீஸ்!

post image

சூப்பர் சிங்கர் பூவையார் நாயகனாக நடிக்கும் ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஜெயவேல் இயக்கியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். கானா பாடல்கள் அவரது அடையாளமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் பாடலில் நடனமாடி அறிமுகமானார்.

மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கூடுதல் பிரபலமானார்.

மாஸ்டர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதற்குப் பிறகு மகாராஜா, அந்தகன் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது, நாயகனாக முன்னேறியுள்ளார். ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

குக் வித் கோமாளி சீசன் 6-இல் கோமாளியாகவும் பங்கேற்று வருவது கவனிக்கத்தக்கது.

Poster of the film Ram Abdullah Antony.
படத்தின் போஸ்டர்.

ராஜேஷ் கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

நடிகர் ராஜேஷின் உடல் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் (75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்ததுடன் முதல்வர் ம... மேலும் பார்க்க

சொந்தக் குரலில் டப்பிங் செய்யாதது ஏன்? அனுமோல் விளக்கம்!

நடிகை அனுமோல் ஹார்ட் பீட் 2 தொடரில் தனது சொந்தக் குரலில் டப்பிங் செய்யாததிற்கு நேரமின்மை உள்பட பலவிதமான காரணங்களைக் கூறியுள்ளார்.டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான ஹார்ட் பீட் இ... மேலும் பார்க்க

தக் லைஃப் முன்பதிவு எப்போது துவங்குகிறது? அறிவிப்பு!

தக் லைஃப் திரைப்படத்தின் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்... மேலும் பார்க்க

பாடகி தீயுடன் என்னை ஒப்பிடக்கூடாது: சின்மயி

பாடகி தீயையும் தன்னையும் ஒப்பிடக்கூடாது என சின்மயி தெரிவித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் படத்த... மேலும் பார்க்க

10-ஆவது முறையாக கிங்ஸ் கோப்பையை வென்ற அல்-இத்திஹாத்..! தொடர் நாயகனாக கரீம் பெஞ்சமா!

சௌதியின் கிங்ஸ் கோப்பையை அல்-இத்திஹாத் கிளப் 10-ஆவது முறையாக வென்று அசத்தியது. சௌதி அரேபியாவின் பழைமையான போட்டிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் கோப்பை என்று அழைக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கும் ‘ரசவாதி’

‘ரசவாதி’ திரைப்படம், பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில், 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சாந்தகுமார் - நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் ரொமாண்டிக் கிரைம் டிராமாவ... மேலும் பார்க்க