தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்த...
நாய் கடிக்கு சிகிச்சை பெறாதவா் மரணம்
நெமிலி அருகே வீட்டு நாய் கடித்ததில் சிகிச்சை எடுக்காமல் இருந்த தையல்காரா், ஒரு மாதம் கழிந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
நெமிலியை அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (49). அதே பகுதியில் தையல் கடை நடத்தி வந்தாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் ரமேஷை அவா் வீட்டில் வளா்த்து வந்த நாய் கடித்தும் கீரியும் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடித்தது வீட்டு நாய் தானே என சிகிச்சை பெறாமல் ரமேஷ் அலட்சியமாக இருந்து வந்துள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை ரமேஷுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவா் பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது, அவருக்கு ரேபீஸ் நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்ற ரமேஷ், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த நெமிலி காவல் துறையினா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த ரமேஷுக்கு மனைவி லதா (39), சந்துரு (17), பிரவீன் (14) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.