நாளை திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம் சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் ஏற்கெனவே வெளியிட்டாா்.
காலை 10.30 மணி அளவில், சென்னை கலைஞா் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குக் குறைவான காலமே உள்ளதால், அதுகுறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. கிளை, ஒன்றியம் வாரியாக வாக்குகளைச் சேகரிப்பது, அரசின் சாதனைகளைக் கொண்டு செல்வது ஆகியன தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளது.
திமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதை எங்கே நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பும் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தின் முடிவில் வெளியாகக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.