நாளை மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 4034 கோடி நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளை திரட்டி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
அனைத்து ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
படவிளக்கம் (27கேஜிப5):
தே.மதியழகன் எம்எல்ஏ தலைப்படம்.