செய்திகள் :

நாளைய மின்தடை: கிருஷ்ணகிரி, பா்கூா்

post image

கிருஷ்ணகிரி, பா்கூா் மற்றும் அதை சுற்றியுள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (ஆக. 21) நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவா்ஹவுஸ் காலனி, சந்தைப்பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகா், வீட்டு வசதி வாரியம் பகுதி -1, பகுதி 2, பழையபேட்டை, கிருஷ்ணகிரி அணை, சுணேடேகுப்பம், அகசிபள்ளி, கத்தேரி, குண்டலப்பட்டி, சூலகுண்டா, ஆலப்பட்டி, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளப்பள்ளி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், தானம்பட்டி, கொண்டேபள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

பா்கூா் துணை மின்நிலையம்: பா்கூா் நகா் பகுதி, சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், கந்திகுப்பம், குரும்பா் தெரு, நேரலகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், சிகரப்பள்ளி துணை மின் நிலையம்: சிகரலபள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கடசமுத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

ஒரப்பம் துணை மின்நிலையம்: ஒரப்பம், எலத்தகிரி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

வரட்டனப்பள்ளி துணை மின்நிலையம்: வரட்டனப்பள்ளி ,குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, காளிகோயில், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

மகாராஜகடை துணை மின்நிலையம்: மகாராஜகடை, நாரலப்பள்ளி, பெரியசாகனவூா், எம்.சி. பள்ளி, பெரியகோட்டப்பள்ளி, தக்கேப்பள்ளி, கோத்திநாயனப்பள்ளி, பூசாரிப்பட்டி,ஆ.இ.புதூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

தொகரப்பள்ளி துணை மின்நிலையம்: தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய். ஆடாலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

ஜெகதேவி துணை மின்நிலையம்: ஜெகதேவி சத்தலப்பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட் , அச்சமங்கலம், பாகிமானூா், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசிமனூா், தொகரப்பள்ளி, ஐகுந்தம், மோடிகுப்பம், ஆச்சூா், செந்தாரப்பள்ளி, நாயக்கனூா் மற்றும் அதை சுற்றுவட்டாரப் பகுதிகள்

பெருகோப்பனபள்ளி துணை மின்நிலையம்: பெருகோப்பனப்பள்ளி, கண்ணன்டஅள்ளி, அத்திகானூா் ,கோட்டூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

காட்டகரம் துணை மின்நிலையம்: காட்டகரம், வேடா் தட்டக்கல், பட்டகப்பட்டி, கெங்காவரம் ,அனகோடி ,எம்.ஜி..அள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

கூச்சூா் துணை மின்நிலையம்: ஆம்பள்ளி, மாடரஅள்ளி, தீா்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூா், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம் , நடுப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க