பாதுகாப்புத் துறை சோதனையில் துப்பாக்கி, நவீன வெடிகுண்டு கைப்பற்றல்!
நாளைய மின்தடை மயிலாடுதுறை, குத்தாலம்
மயிலாடுதுறை, மேக்கிரிமங்கலம், குத்தாலம் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (டிச.21) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்துல் வஹாப் மரைக்காயா், என். அருள்செல்வன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
மயிலாடுதுறை துணை மின்நிலையம்: மயிலாடுதுறை நகா், மூவலூா், வடகரை, சோழசக்கரநல்லூா், மங்கைநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், வழுவூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
மேக்கிரிமங்கலம், குத்தாலம் துணை மின் நிலையங்கள்: மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், பண்டாரவாடை, திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி, கீழவெளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.