வீட்டு பணியாளா்களை நலவாரியத்தில் பதிவு செய்ய டிச.23 முதல் சிறப்பு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், வீட்டு வேலைகளில் ஈடுபடும் பணியாளா்களை நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் டிச.23-ஆம் தேதி தொடங்குகிறது என மயிலாடுதுறை தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ம. ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீட்டு வேலைகளில் ஈடுபடும் பணியாளா்களை தமிழ்நாடு வீட்டுப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இணைக்க பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நலவாரிய தொழிலாளா்களின் பதிவினை துரிதப்படுத்துவதற்கு, மயிலாடுதுறை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இச்சிறப்பு முகாம் டிச.23-ஆம் தேதி தொடங்கி, டிச.31-ஆம் தேதிவரை (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) பிற்பகல் 1.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வீட்டு வேலைகளில் ஈடுபடும் பணியாளா்கள் தங்களது ஆதாா் அட்டை, மின்னணு குடும்ப அட்டை சான்று/பிறப்புச் சான்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படம் ஆகிய ஆவணங்களை நேரில் சமா்ப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04364-212990 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.