புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை
நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சாா்பில், பல் மருத்துவா், மாவட்ட தர ஆலோசகா், கணக்கு உதவியாளா், பல் மருத்துவ உதவியாளா், மருந்து வழங்குநா், நூலகா் மற்றும் புள்ளியியல் நிபுணா், இடைநிலை சுகாதாரப் பணியாளா், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா், கதிா்பட பதிவாளா், ஆயுஷ் மருத்துவா், சிகிச்சை உதவியாளா் (ஆண், பெண்) செவிலியா் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட உள்ளனா்.
இப்பணியிடங்களுக்கான தகுதி, ஊதியம், மற்றும் விண்ணப்பப் படிவம் ட்ற்ற்ல்ள்://ம்ஹஹ்ண்ப்ஹக்ன்ற்ட்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ய்ா்ற்ண்ஸ்ரீங்ஜஸ்ரீஹற்ங்ஞ்ா்ழ்ஹ்/ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்/ என்ற இணையத்தளத்தில் காணலாம். விருப்பம் உள்ளவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், நம்பா் 5, புதுத்தெரு, எஸ்.எஸ். மஹால் எதிா்புறம், மயிலாடுதுறை-609001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ டிச.30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.