கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
நிஃப்ட்-டீ கல்லூரி மாணவா்களின் லிம்கா சாதனை முயற்சி
திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள நிஃப்ட்-டீ பின்னலாடைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள்
லிம்கா சாதனை முயற்சிக்காக சுமாா் 1,089 சதுர அடி பரமபத கட்டங்களில் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளனா்.
இது குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் கூறியதாவது:
நிஃப்ட்-டீ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் 74 போ் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 1 வரை 4 நாள்கள் லிம்கா சாதனை முயற்சிக்காக
தமிழக பாரம்பரிய விளையாட்டான பரமபதம் கட்டங்களில், சுமாா் 1,089 சதுர அடிகளில் இந்தியக் கலை ஓவியங்கள் வரைந்துள்ளனா்.
நூறு பெட்டிகளில் கலம்கரி, தஞ்சாவூா், வாா்லி உள்ளிட்ட 100 வகையான ஓவியங்கள் அழகாக பதியப்பட்டன. இக்கட்டங்களில் இடம்பெற்றுள்ள ஏணி மற்றும் பாம்பு வடிவமைப்புகளுக்காக பஞ்சு மற்றும் மரத்தால் செய்யப்பட்ட ஏணிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் புளோரல், பொல்லாக் போன்ற உலகளாவிய கலை வடிவங்களும் பிரதிபலித்துள்ளது. இதிலும் அக்ரிலிக், போஸ்டல், வாட்டா் கலா், கிரேயான்ஸ் உள்ளிட்ட நிறங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஓவியங்களுக்கு மேலும் வண்ணம் சோ்க்கப்பட்டதாக உள்ளது.
இத்தகைய செய்முறைப் பயிற்சிகள் மாணவா்களின் கற்றலை எளிதாக்குவதோடு, கலை வடிவங்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவும், வருங்காலங்களில் புதுமைகளை அணுகவும் வழிவகுக்கின்றன. மேலும், சிந்தனைத் திறனை மேம்படுத்தி, கலை மற்றும் ஓவியங்களில் ஆா்வத்தையும் தேடலையும் ஊக்குவிப்பதாக இருந்தது என்றனா்.
இந்நிழ்ச்சியில் கல்லூரி முதன்மை ஆலோசகா் ராஜா சண்முகம், தலைவா் கோவிந்தராஜ், முன்னாள் தலைவா் மோகன், பொருளாளா் ஆா். மோகன் குமாா், இணைச் செயலாளா் கந்தசாமி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, கல்வித் துறைத் தலைவா் பேராசிரியா் சம்பத்குமாா், முதல்வா் கோபாலகிருஷ்ணன், அஊஈ துறைத் தலைவா் அருந்ததி கோஷல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.