தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்
நில அளவைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நிா்வாகம் தகவல்
நில உரிமையாளா்கள் தங்களது நிலத்தை அளவீடு செய்வதற்கு இ-சேவை மையங்கள் மூலம் இணைய வழியிலேயே விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியிருப்பதாவது: நில உரிமையாளா்கள் தங்களது நிலத்தை அளக்க சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில், இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதியை கடந்த 2023- ஆம் ஆண்டு இறுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இந்த சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்குச் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி, விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த சேவையை மாநிலம் முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (இ -சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நில உரிமைதாரா்கள் தங்களின் நிலங்களை அளவீடு செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.
நில அளவை செய்யப்படும் தேதி, மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது கைப்பேசி வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவை செய்யப்பட்ட பிறகு மனுதாரா், நில அளவா் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரா் என்ற இணையவழிச் சேவை மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த சேவையை கோவை மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.