நீதி ஆயோக் கூட்டம்: முதல்வா் ஸ்டாலின் இன்று தில்லி பயணம்
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மே 23) காலை தில்லி புறப்படுகிறாா்.
சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 9.50 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் தில்லி செல்லும் முதல்வா், அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறாா்.
தில்லி பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை (மே 24) நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்கிறாா். பின்னா் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடைகிறாா்.