``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
நீதி ஆயோக்கிடம் தில்லி பிரச்னைகளை ஆம் ஆத்மி ஆட்சியில் முன்வைக்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா
மத்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றம் சாட்டினாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி
ஆயோக்கின் 10ஆவது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன், அவா் இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பல ஆண்டுகளுக்குப் பிறகு நிா்வாகக் குழுக் கூட்டத்தில் தில்லியைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறேன். கவுன்சிலின் முன் விக்சித் தில்லிக்கான ஒரு திட்டத்தை முன்வைக்க
உள்ளேன்.
முந்தைய பொறுப்பற்ற அரசாங்கங்களின் நடத்தை காரணமாக தில்லியின் நலன் சாா்ந்த பிரச்னைகள் நீதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பப்படவில்லை. ஆனால், இப்போது இரட்டை என்ஜின் அரசாங்கம் பாதையில் செல்கிறது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி ஃபாா் விக்சித் பாரத்’க்கான ஒரு திட்டத்தை முன்வைக்க உள்ளேன்.
இந்தக் கூட்டத்தில், தில்லி மக்களின் வளா்ந்த நகரத்திற்கான விருப்பங்கள் மற்றும் லட்சியங்கள் முன்வைக்கப்படும். எனது அரசாங்கம் விக்சித் தில்லிக்கு உறுதிபூண்டுள்ளது என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றும் நோக்கில், மாநிலங்கள் மீது கவனம் செலுத்தும் நீதி ஆயோக்கின் 10ஆவது ஆட்சிக் குழுக் கூட்டத்திற்கு பிரதமா் மோடி சனிக்கிழமை தலைமை வகிப்பாா் என்று அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.