செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

post image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 5-ஆவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 5-ஆவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.

இதேபோல மற்ற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்டறிந்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.

2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தாததாலும், நீதிமன்ற உத்தரவு மீது உரிய நடவடிக்கை எடுக்காததாலும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக வழக்குரைஞா் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் கே.ஆா் ஸ்ரீராம் - சுந்தா்மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா். மேலும், நீதிமன்ற உத்தரவை கடந்த 4 ஆண்டுகளாக அமல்படுத்ததாத சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், இந்தத் தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனா்.

மேலும், விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, ஜூலை 24-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க