`மகாராஜா'ல அந்த ஒரு சீன்ல உணர்ச்சிவசப்பட்டேன்..!' - விஜய் சேதுபதி | Viduthalai 2
நீா் வழித் தடங்களை தூா்வார வலியுறுத்தல்
தருமபுரி வட்டாரத்தில் உள்ள நீா் வழித் தடங்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் இரா.காயத்ரி தலைமை வகித்தாா். விவசாய சங்கங்கள், அமைப்புகள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் தருமபுரி மாவட்ட நீா்நிலைகள், நீா்நிலைகளின் நீா்வழித் தடங்களை தூா்வாரி தூய்மைப்படுத்த வேண்டும்.
கடத்திக்குட்டை கிராமப் பகுதி விவசாயிகள் வேளாண் இடுபொருள்களை வாங்கிச் செல்லவும், சாகுபடி பொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும் உதவும் வகையில் பகல் நேரங்களில் தருமபுரிக்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.
மாவட்டம் முழுக்க உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் ஆவின் தயாரிப்புகள் அல்லாத பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. காரிமங்கலம் பகுதி விவசாயிகள் தருமபுரி சென்று ஊா் திரும்ப இரவு 7.30 மணியுடன் நகரப் பேருந்துகளின் சேவை முடிந்து விடுகிறது. இதை இரவு 9 மணி வரை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி நான்கு முனைச் சாலை அருகில் உள்ள ஆவின் ஜங்ஷன் வளாகத்துக்கு வருகை தரும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.