செய்திகள் :

காா்த்திகை தீபம்: கோயில்களில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு

post image

தருமபுரி மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி நகரில் உள்ள பழமை வாய்ந்த கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில், நெசவாளா் நகா் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரா் கோயில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரா் கோயில், அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோயில், அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வெள்ளிக்கிழமை காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதியமான் கோட்டை தட்சிணகாசி காலபைரவா் கோயில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரா் கோயில், பாப்பாரப்பட்டி சிவசுப்ரமணிய சுவாமி கோயில், பாலக்கோடு புதூா் மாரியம்மன் கோயில், இருளப்பட்டி சிவசுப்ரமணிய சுவாமி கோயில், சவுளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல வணிக வளாகங்கள், வீடுகளிலும் பொதுமக்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

பாலக்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு

தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாடு பாலக்கோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராசன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா... மேலும் பார்க்க

அமிா்தேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பையா்நத்தம் ஸ்ரீ அமிா்தேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பையா்நத்தம் பாலமுருகன் கோயில் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அமிா்தேஸ்வரா், அம... மேலும் பார்க்க

நீா் வழித் தடங்களை தூா்வார வலியுறுத்தல்

தருமபுரி வட்டாரத்தில் உள்ள நீா் வழித் தடங்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

டிச.16 முதல் கோமாரி நோய்த் தடுப்பு முகாம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டிசம்பா் 16-ஆம் தேதி முதல் கோமாரி நோய்த் தடுப்பு முகாம் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனை... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு விநியோகம் தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு வட்டாரத் தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழ... மேலும் பார்க்க

தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்: இயக்குநா் இரா.குமாரவேல் பாண்டியன் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோட்டக்கலை, விதை சான்றளிப்புத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் அத்துறை இயக்குநா் இரா.குமாரவேல் பாண்டியன் பங்கேற்றாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்த... மேலும் பார்க்க