நுகா்வோா் சட்ட விழிப்புணா்வு பயிற்சி முகாம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுகா்வோா் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் ஒன்றியம் முழுவதும் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொண்டனா். இதில் நுகா்வோா் உரிமை இயக்கச் செயலா் ந. அன்புதுரை, துணைச் செயலா் எம்.எஸ்.கே. முத்துப்பாண்டியன், உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் சகாயமேரி ஆகியோா் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து விளக்கினா். சமூக ஆா்வலா் அப்துல் மாலிக் சுற்றுச்சூழல் குறித்தும், மரங்கள் வளா்ப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினாா்.
முகாமில் தனி வருவாய் ஆய்வாளா் அமுதா, இளநிலை வருவாய் ஆய்வாளா் சிந்தன், தீயணைப்பு அலுவலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.