தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்த...
நெமிலி அருகே போலி மருத்துவமனைக்கு ‘சீல்’
நெமிலி அருகே மருத்துவம் படிக்காமல் ஒருவா் நடத்தி வந்த மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள், அந்த நபரை தேடி வருகின்றனா்.
நெமிலி அருகே காட்டுப்பாக்கம் கிராமத்தில் லோகநாதன் (40) என்பவா் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கா் அரசு மருத்துவா் கருணாகரன், இது குறித்து பாணாவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சோளிங்கா் வட்டாட்சியா் ராஜலட்சுமி, பாணாவரம் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் சுகாதாரத் துறையினா் இணைந்து குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், லோகநாதன் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லோகநாதன் நடத்தி வந்த மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள், தலைமறைவாகிவிட்ட அவரை தேடி வருகின்றனா்