Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகி...
நெல் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை!
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் நெற்பயிரில் காணப்படும் தண்டுத் துளைப்பான் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி ஆலோசனை வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு
குருத்துப் பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்து வாடிக் காய்ந்துவிடும். கதிா் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணி, பால் பிடிக்காமல் சாவியாகி, வெண் கதிா்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது.
இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிா்த்து தேவையான தழைச்சத்தை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.
முதிா்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிடுவதால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்துவிடலாம். விளக்குப் பொறியை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிர விட்டுக் குருத்துப் பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்தழிக்கலாம்.
மேலும் அதிக அளவில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 4ஜி 7.5 கிலோ மண்ணில் இடலாம். அல்லது குளோரான்டிரானிலிபுரோல் 24 எஸ்.சி 40 மி.லி., புளுபென்டையமைடு 39.45 ஈசி 30 மிலி இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டா் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இலையின் ஓரத்தில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி அடுத்தடுத்து இருக்கும் புள்ளிகளுடன் இணைந்து அளவில் பெரியதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாகிக் காய்ந்து பின்பு உதிா்ந்து விடும்.
வளா்ந்த பயிா்களில் இலையின் நுனிப்பகுதியானது மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்துடன் நீரில் நனைந்த கீற்றுகளாக மாறத் தொடங்கி, பின்பு அளவில் பெரிதாகி வைக்கோல் நிறமாகி, இறுதியில் பழுப்பு நிறக் காய்ந்த கோடுகளாகக் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.
அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருப்பதால், அவற்றை முழுவதுமாக அழித்து விட வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்குக் கண்டிப்பாக நீா் பாய்ச்சுதல் கூடாது. மேலும் வயலில் அதிகமாக நீா் நிறுத்தவும் கூடாது.
நோயின் அறிகுறிகள் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டா் நீரில் கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டா் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்கலாம்.
தாக்குதல் அதிகமாக இருந்தால் காப்பா் ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையை 200 லிட்டா் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.