6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!
நெல்லை அருகே பெண் தற்கொலை
திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்தை சோ்ந்த தொழிலாளி முருகன் மனைவி தங்கமுத்து ( 45). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். தங்கமுத்து கடந்த சில நாள்களாக உடல்நல பாதிப்பால் மன விரக்தியில் இருந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தங்கமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.